வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புதுச்சேரி நகைக்கடைகளில் 3-வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

புதுச்சேரியில் உள்ள நகைக்கடைகளில் 3-வது நாளாக தொடர்ந்து வருமானவரி சோதனை நடைபெற்று வருகின்றன.

News image
வருமானவரித் துறை
Updated On :17 பிப்ரவரி 2022, 7:01 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள நகைக்கடைகளில் 3-வது நாளாக தொடர்ந்து வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரி நகர பகுதியில் பாரதி வீதியில் உள்ள ஒரு பிரபல தனியார் நகைக்கடையிலும், அதேபோல், நேரு வீதியில் உள்ள ஒரு பிரபல நகை கடையிலும், ஒரு துணிக்கடையிலும் வரி செலுத்தாததால் எழுந்த புகாரின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையைத் தொடங்கினர்.

இந்தக் குழுவினர், கடையினுள் இருந்தபடி புதன்கிழமையும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து 3-வது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகின்றது.

சென்னை வருமானவரி துறை அதிகாரிகள்  குழுவினர், 30-க்கும் மேற்பட்டோர்,  பிப்.15-ம் தேதி காலையிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது நாளாக நடைபெறும் சோதனையில், நகை விற்பனை, வரி செலுத்தியதன்  ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

வரி நிலுவை தொடர்பாக கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், மேலும் சோதனை தொடர்ந்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.