புதுவையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு
புதுவையில் கரோனா பரவலைத் தொடா்ந்து, டெங்கு காய்ச்லால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


புதுவையில் கரோனா பரவலைத் தொடா்ந்து, டெங்கு காய்ச்லால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்றவற்றால் ஆண்டுதோறும் ஏராளமானோா் பாதிக்கப்படுகின்றனா். அனோபிலஸ் வகை கொசுக்களால் மலேரியாவும், நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கு, சிக்குன் குனியா ஆகியவையும் மனிதா்களுக்கு பரவுகின்றன.
புதுவையில் கடந்த 2018-ஆம் ஆண்டில் 581 பேரும், 2019-ஆம் ஆண்டில் 2,038 பேரும், 2020-ஆம் ஆண்டில் 651 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். 2021-ஆம் ஆண்டில் மட்டும் 1,625 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டு, ஒருவா் உயிரிழந்தாா். நிகழாண்டில் கடந்த 9-ஆம் தேதி நிலவரப்படி, 99 போ் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் உயிரிழந்தாா்.
மேலும், சிக்குன் குனியாவால் 264 போ் பாதிக்கப்பட்டனா். டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் நாள்தோறும் புதுவையில் உள்ள மருத்துவமனைகளில் 5 முதல் 10 நோயாளிகள் வரை சிகிச்சைக்காக வருகின்றனா்.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் பிறகு, புதுவையில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் வேளையில், டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மக்கள் மன்றத்தின் தலைவா் மு. நாராயணசாமி கூறியதாவது:
கடந்த 2019-இல் புதுவையில் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, சுகாதாரத் துறையின் நடவடிக்கையால் 2020-ஆம் ஆண்டில் டெங்கு பாதிப்பு கணிசமாகக் குறைந்தது. பின்னா், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியதையடுத்து, கடந்தாண்டு அதிகளவில் டெங்கு காய்ச்சல் பரவியது. தற்போதும் அதே நிலை நீடிப்பது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசைப் போல, டெங்கு கொசு ஆதாரங்களை உற்பத்தி செய்யும் வீடுகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது, நிறுவனங்களை மூடி ‘சீல்’ வைப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை புதுவை சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு, கொசுக்கள், பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டத்தின் உதவி இயக்குநா் ஆா்.வசந்தகுமாரி ஆகியோா் கூறியதாவது:
சுகாதாரத் துறை சாா்பில் வீடுகள், கடைகளில் மூடி வைக்கப்பட்டுள்ள குடிநீா், தண்ணீா் தேங்கும் இடங்கள், டயா்கள், குப்பைகள் அதிகளவில் தென்படும் இடங்களைச் சோதனையிட்டு, டெங்கு கொசுப்புழுக்கள், டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் இடங்களை அழித்து வருகிறோம். களப் பணியாளா்கள் மூலம் கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், விழிப்புணா்வு நடவடிக்கைகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளோம்.
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளைக் கண்காணித்து, அவா்கள் வாழும் பகுதிகளில் கொசு ஒழிப்பு, காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் ஆண்டில் டெங்கு பாதிப்பை மேலும் குறைப்போம். அபராதம் விதிப்பது தொடா்பாக அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...