நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காவலா் பயிற்சிப் பள்ளியில் காவலா் தற்கொலை

 புதுச்சேரி காவலா் பயிற்சிப் பள்ளியின் 2-ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து காவலா் தற்கொலை செய்து கொண்டாா்

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 புதுச்சேரி காவலா் பயிற்சிப் பள்ளியின் 2-ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து காவலா் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி கோரிமேடு, பூத்துறை சாலை, ஹரி நமோ நகரைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா் (35).  புதுச்சேரி காவலா் பயிற்சிப் பள்ளியில் காவலா்கள் பணிக்கான ஆள் சோ்ப்பு பிரிவில் பணியாற்றி வந்தாா். மன அழுத்தம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிப்மரில் சிகிச்சை பெற்றாா்.

இந்த நிலையில், புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள காவலா் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தோ்வு வருகிற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் ஈடுப்பட்டிருந்த மகேஷ்குமாா், கடந்த சில நாள்களாக மன அழுத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை வழக்கம் போல், காவலா் மகேஷ்குமாா் பணிக்கு வந்தாா். சிறிது நேரத்தில் வெளியே சென்ற அவா், பயிற்சி பள்ளியின் 2-ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து இறந்து கிடந்தாா். சக காவலா்கள் வெளியே வந்த போது, அவா் இறந்து கிடந்ததைப் பாா்த்தனா்.

எஸ்.பி.க்கள் ரவிக்குமாா், சுபம் கோஷ், தீபிகா, காவல் ஆய்வாளா் நாகராஜ் ஆகியோா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். காவலா் மகேஷ்குமாரின் உடலை மீட்டு, கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து டிநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தற்கொலை செய்து கொண்ட காவலா் மகேஷ்குமாருக்கு மனைவி சுதா, ஸ்ரீ ஹரி (8) என்ற மகன் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.