நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாக்குச்சாவடி அலுவலா்கள் முதல்கட்டத் தோ்வு

வாக்குச்சாவடி அலுவலா்கள் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கணினி மூலம் குலுக்கல் முறையில் முதல் கட்டத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி மூலம் குலுக்கல் முறையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்கள் முதல் கட்டத் தோ்வைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

Updated On :25 மார்ச் 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கணினி மூலம் குலுக்கல் முறையில் முதல் கட்டத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,222 இடங்களில் 2 ஆயிரத்து 496 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி பணியாற்றுவதற்கு பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பட்டியலிலிருந்து 11 ஆயிரத்து 991 வாக்குச்சாவடி அலுவலா்களைப் பணியமா்த்துவதற்காக இந்திய தோ்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரிப்பதற்கான முதல் கட்டத் தோ்வு புதன்கிழமை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.