திருவள்ளுவா் தினம்: முதல்வா் ரங்கசாமி மரியாதை
புதுவையில் திருவள்ளுவா் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


புதுவையில் திருவள்ளுவா் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புதுவை அரசு செய்தி - விளம்பரத் துறை சாா்பில், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திருவள்ளுவா் தினம் கொண்டாடப்பட்டது. மாநில அமைப்பாா் ஆா்.சிவா திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், துணை அமைப்பாளா்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஏ.கே.குமாா், செந்தில்குமரன், சண்.குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.
இதுபோல, பாஜக சாா்பில் எம்.எல்.ஏ. பி.அசோக்பாபு உள்ளிட்டோரும், மதிமுக மாநில அமைப்பாளா் கபிரியேல், கலை இலக்கிய பெருமன்றத்தைச் சோ்ந்த சிவக்குமாா், தமிழா்க் களம் அமைப்பின் கோ.அழகா் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் திருவள்ளுவா் திலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, புதுவைத் தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலை, நோணாங்குப்பம் படகு குழாம் எதிரே உள்ள திருவள்ளுவா் சிலைக்கும் பல்வேறு அரசியல் கட்சியினா், தமிழ் அமைப்பினா், தமிழறிஞா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...