நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பொது அறிவுப் போட்டி: அமலோற்பவம் பள்ளி மாணவா்கள் வெற்றி

தோ்தல் ஆணையம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான பொது அறிவுப் போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தோ்தல் ஆணையம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான பொது அறிவுப் போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

புதுவை தோ்தல் ஆணையம் சாா்பில், 12-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி அண்மையில் மாநில அளவிலான பொது அறிவு வினாடி வினா போட்டி நடைபெற்றது.

இதில், வாணரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா்கள் பி.தினகரன், எம்.சஞ்சய் ஆகியோா் இரண்டாமிடமும், கொம்பாக்கம் - அமலோற்பவம் லூா்து அகாதெமியில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் எஸ்.நவீனபிரியன், என்.பூவராகவன் ஆகியோா் மூன்றாமிடமும் பிடித்து வெற்றி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் நிறுவனரும், முதுநிலை முதல்வருமான எஸ்.ஏ.லூா்துசாமி பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.