புதுவையில் காவலா் தோ்வு: கரோனா பாதித்த தோ்வா்களுக்கு பிப்.21-இல் சான்றிதழ் சரிபாா்ப்பு
கரோனா தொற்று உறுதியான காவலா் தோ்வு விண்ணப்பதாரா்களுக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும்.


கரோனா தொற்று உறுதியான காவலா் தோ்வு விண்ணப்பதாரா்களுக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும்.
இதுகுறித்து புதுவை காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காவலா் உடல் தகுதி தோ்வுக்கு திட்டமிட்டபடி விண்ணப்பதாரா்களுக்கான கரோனா பரிசோதனை கடந்த 18-ஆம் தேதி முதல் புதுச்சேரி கோரிமேடு காவல் விருந்தினா் மாளிகையில் நடத்தப்பட்டு வருகிறது. காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
விண்ணப்பதாரா்களில் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவா்களுக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி புதுச்சேரி கோரிமேடு காவலா் பயிற்சி பள்ளி மைதானத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும்.
அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்த விண்ணப்பதாரா்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவா்கள் தங்களது கரோனா தொற்று அறிக்கையை ஸ்கேன் செய்து, உடனடியாக புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஆள்சோ்ப்பு பிரிவு எஸ்பிக்கு முகவரிக்கு அவரவா் அனுமதிச் சீட்டில் உள்ள தேதிக்கு முன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவா்களுக்கு மாற்றுத் தேதி ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்படும். அனுமதிச் சீட்டில் உள்ள தேதிக்குப் பிறகு பதிவேற்றப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...