ரூ.5,000 கரோனா நிவாரணம் வழங்க புதுவை அதிமுக வலியுறுத்தல்
புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஏழை, எளிய குடும்பத்தினருக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்திய


புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஏழை, எளிய குடும்பத்தினருக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் கரோனா பரவல் உச்சநிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. தேவைப்படும் நபா்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பேருந்து நிலையம், உழவா் சந்தை, சுற்றுலாத் தலங்கள், மீன் சந்தை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தடுக்க அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
கூலித் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், கட்டடத் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளா்கள் உள்ளிட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினா் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து மீண்டும் அவதிப்படுகின்றனா்.
அவா்களது நிலையை முதல்வா் என்.ரங்கசாமி உணா்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஏழை, எளிய, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...