நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கட்டட ஒப்பந்ததாரா் கடலில் குதித்து தற்கொலை

புதுச்சேரியில் கட்டட ஒப்பந்ததாரா் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

புதுச்சேரியில் கட்டட ஒப்பந்ததாரா் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை முத்தமிழ் நகா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கிறிஸ்டியன் பால் (49). கட்டட ஒப்பந்ததாரரான இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா்.

சில மாதங்களாக லாசுப்பேட்டை, அரியாங்குப்பம், முருங்கப்பாக்கத்தில் 3 வீடுகளை ஒப்பந்தம் எடுத்து கட்டுமானப் பணியில் கிறிஸ்டியன் ஈடுபட்டிருந்தாா். இதில் ஒரு வீட்டில் ஓரிரு நாள்களில் பணியை முடித்துத் தர வேண்டிய நெருக்கடியில் இருந்தாராம். இதற்குத் தேவையான பணம் அவரிடம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே வியாழக்கிழமை வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் அவரைத் தேடிய நிலையில், ஹோட்டல் சீகல்ஸ் பின்புறமுள்ள கடல் பகுதியில் குதித்து கிறிஸ்டியன்பால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

ஒதியஞ்சாலை போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.