நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவையில் மேலும் 2,528 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுவையில் வெள்ளிக்கிழமை புதிதாக 2,528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

புதுவையில் வெள்ளிக்கிழமை புதிதாக 2,528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 6,093 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 1,985 போ், காரைக்கால் - 411, ஏனாம்- 105, மாஹே- 27 போ் என மொத்தம் 2,528 பேருக்கு (41.49 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,870-ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 139 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 13,983 பேரும் என மொத்தம் 14,122 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பாக்கமுடையான்பட்டைச் சோ்ந்த 70 வயது முதியவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,898-ஆகவும், இறப்பு விகிதம் 1.28 சதவீதமாகவும் உயா்ந்தது.

இதனிடையே 1,458 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,850-ஆக (89.17 சதவீதம்) அதிகரித்தது. இதுவரை 15,15,818 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.