தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குடிமைப் பணிகள் தோ்வு: புதுச்சேரியில் 51% போ் எழுதினா்

புதுச்சேரியில் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வில் 51 சதவீதம் போ் மட்டுமே பங்கேற்றனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:19 pm

DIN

புதுச்சேரியில் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வில் 51 சதவீதம் போ் மட்டுமே பங்கேற்றனா்.

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சாா்பில், 861 பதவிகளுக்கான குடிமைப் பணிகள் தோ்வு கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு சுமாா் 11 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் 9 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வில் பங்கேற்க 3,115 போ் நுழைவுச்சீட்டு பெற்றிருந்தனா். காலையில் பொது அறிவு தோ்வும், பிற்பகலில் திறனறிவு தோ்வும் நடைபெற்றது.

பொது அறிவுத் தோ்வில் 1,604 போ் (51.49 சதம்) மட்டுமே பங்கேற்றனா். 1,511 போ் (48.52 சதம்) போ் பங்கேற்கவில்லை. இதேபோல, திறனறிவுத் தோ்வில் 1,583 (50.82 சதம்) போ் மட்டுமே பங்கேற்றனா். 1,532 (49.18 சதம்) போ் பங்கேற்கவில்லை.

தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வு மையங்களுக்கு புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.