தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுவை காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுவை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:18 pm

DIN

புதுவை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் முன்னிலை வகித்தாா். புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். திருச்சி வேலுச்சாமி சிறப்புரை நிகழ்த்தினாா்.

முன்னான முதல்வா் வே.நாராயணராமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், முன்னாள் அமைச்சா்கள் கந்தசாமி , ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், நீல கங்காதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மாநிலத்தில் மண்டல காங்கிரஸ் குழுக்களை அமைத்து, அதன் அதிகார வரம்பை இறுதி செய்வது. 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதயாத்திரை செல்வது, சுதந்திர தினத்தை அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது.

நவம்பா் 15-க்குள் மண்டல, மாவட்ட அளவில் அனைத்துப் பொறுப்புகளையும் நியமிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.