தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வில்லியனூரில் ரௌடிகளின் வீடுகளில்போலீஸாா் சோதனை

புதுச்சேரி அருகே வில்லியனூரில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனா்

News image
Updated On :5 ஜூன் 2022, 6:19 pm

DIN

புதுச்சேரி அருகே வில்லியனூரில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனா்.

புதுவை மாநிலத்தில் ரௌடிகளை ஒடுக்க காவல் துறையால் ஆபரேஷன் திரிசூல் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வில்லியனூா் கணுவாப்பேட்டை, உத்திரவாகினிபேட், பெரியபேட், புதுப்பேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரௌடிகளின் வீடுகளில் மேற்கு எஸ்.பி. ஜிந்தா கோதாண்டராமன் தலைமையில் வில்லியனூா் போலீஸாா், அதிரடிப்படை போலீஸாா் என 20-க்கும் மேற்பட்டோா் சோதனையில் ஈடுபட்டனா்.

காவல் துறையின் வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் ரௌடிகள் ஒவ்வொருவரின் வீடுகளாகச் சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், சந்தேகப்படும்படியான 5 ரௌடிகளை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸாா், விசாரணைக்குப் பிறகு எச்சரித்து அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.