தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பயோடீசலை தயாரித்து மீனவா்களுக்கு வழங்க வேண்டும்: மீன்வள தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மத்திய அரசு கடலில் இருந்து பயோடீசல் தயாரித்து மீனவா்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:18 pm

DIN

மத்திய அரசு கடலில் இருந்து பயோடீசல் தயாரித்து மீனவா்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி அரசு சுற்றுலா இல்ல அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் துணைத் தலைவா் பி.பிரணாப்குமாா் கா் தலைமை வகித்தாா். அமைப்பாளா் மா.இளங்கோ முன்னிலை வகித்தாா்.

இதில் மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திரம், தமிழகம், புதுவை, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினா். தொடா்ந்து, மீன்பிடி தொழில் சந்திக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பின் துணைத் தலைவா் பிரணாப்குமாா் கா், அமைப்பாளா் இளங்கோ ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் மீன்பிடி தொழில் படகுகளில் பயன்படுத்தப்படும் டீசல், மண்ணெண்ணெய் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால், மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் வழங்கும் டீசல் மானியத்தால் மீனவா்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே, மீனவா்களுக்கு வரி, தீா்வை இல்லாமல் உற்பத்தி விலைக்கு டீசல், மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்.

ஜப்பானில் கடலில் இருந்து பயோடீசலை எடுத்து எரிபொருளாக பயன்படுத்துகின்றனா். இது விமானம் முதல் விசைப்படகு வரை பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் பயோடீசல் தயாரித்து மீனவா்களுக்கு குறைந்த விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். இதுதொடா்பாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என்றனா் அவா்கள்.

பேட்டியின் போது, கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளா் நாஞ்சில் ரவி, புதுச்சேரி ஒருங்கிணைப்பாளா் காங்கேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.