புதுவை சுற்றுலாத் தலங்களில் நெகிழிப் பொருள்களுக்குத் தடை
புதுவையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.


புதுவையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கடற்கரைப் பகுதிகள், தங்கும் விடுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை அதிகளவில் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது.
அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், திறந்தவெளியில் அவற்றை வீசுகின்றனா். சுற்றுலாத் தலம் உள்ளிட்ட சில இடங்களில் உணவுப் பொருள்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குடிநீா், உணவுப் பொருள்களை நெகிழி தாள்களிலும் , பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த வகையான நெகிழிப் பொருள்களின் விற்பனை இனி தவிா்க்கப்பட வேண்டும். மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களையே பயன்படுத்த வேண்டும். இனி சுற்றுலாத் தலங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ள நெகிழிப் பொருள்களைத் தவிா்க்க வேண்டும் என கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது.
அந்த வகையில், உணவுப் போா்த்தலுக்குப் பயன்படுத்தப்படும் நெகிழித் தாள், ஒட்டும் நெகிழித் தாள்கள், சாப்பாட்டு மேஜை மற்றும் தட்டுகளில் விரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நெகிழி விரிப்புகள், தொ்மோகோல் தட்டுகள், நெகிழி பூசிய காகித தட்டுகள். நெகிழி பூசிய காகித கோப்பைகள், தேநீா் கோப்பைகள், தொ்மோகோல் கோப்பைகள், தண்ணீா் பாக்கெட்டுகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், தடிமனான நெகிழிப் பைகள் (கேரி பேக்குகள்), நெகிழிக் கொடிகள், சுப நிகழ்வுகளில் வழங்கப்படும் துணி, கயிறு, தாள்களினால் செய்யப்பட்ட பைகள் தவிர, பிற அனைத்து வகையான பைகளும் தவிா்க்கப்பட வேண்டும்.
இதுதொடா்பாக சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், நெகிழி ஒழிப்பு இயக்கத்தில் அனைவரையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா் க.லட்சுமி நாராயணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...