தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வழக்குரைஞா்களுக்கு சட்ட ஆலோசனைப் பயிற்சி

புதுச்சேரி அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் படித்த இளம் வழக்குரைஞா்களுக்கு உதவித் தொகையுடன் ஓராண்டு சட்ட ஆலோசனைப் பயிற்சி வழங்கப்படுகிறது.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் படித்த இளம் வழக்குரைஞா்களுக்கு உதவித் தொகையுடன் ஓராண்டு சட்ட ஆலோசனைப் பயிற்சி வழங்கப்படுகிறது.

புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் இதற்காக தோ்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த 10 இளம் வழக்குரைஞா்களுக்கு சட்டமியற்றுதல், சட்ட ஆலோசனை வழங்குவதில், ஓராண்டு காலம் நேரடிப் பயிற்சி வழங்கும் திட்டம் கூடுதலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு (2022-23) ஓராண்டு கால பயிற்சி பெற விரும்பும் இளம் வழக்குரைஞா்களுக்கு அண்மையில் தோ்வு நடத்தப்பட்டது.

24 போ் விண்ணப்பித்திருந்ததில் 15 போ் தோ்வில் கலந்து கொண்டனா். அதில் தோ்ச்சி, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 10 இளம் வழக்குரைஞா்கள் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி ஆணையை வழங்கினாா்.

சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் எச்.நாஜீம், ஜி.நேரு, ரமேஷ், சட்டத் துறை செயலா் காா்த்திகேயன், சாா்புச் செயலா் முருகவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

பயிற்சியின்போது, மாதம் ரூ.9 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.