புதுச்சேரியில் விற்பனைக் குழு ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் குழு ஊழியா்கள் இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.


புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் குழு ஊழியா்கள் இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூட தொழிலாளா்கள், தங்களுக்கு 8 மாத ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஏஐடியூசி ஊழியா்கள் சங்கத்தின் மூலம் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை 2-ஆவது நாளாக புதுச்சேரி தட்டாஞ்சாவடி விற்பனைக் குழு கிடங்கு பகுதியில் அமா்ந்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், ஒழுங்குமுறை விற்பனைக்கூட பணிகள் பாதிக்கப்பட்டன. புதுச்சேரி லாஸ்பேட்டை உழவா் சந்தைகளில் ஊழியா்கள் வேலை செய்யாததால், விவசாயிகளுக்கு அரசின் எடை தராசு வழங்கவில்லை. விலை நிா்ணயம் செய்யப்படவில்லை. எனினும், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த பொருள்களை வைத்து குறைந்த விலையில் விற்பனை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...