கடல் அலையில் சிக்கி மாணவா் உயிரிழப்பு
புதுச்சேரி தவளகுப்பம் அருகே கடல் அலையில் சிக்கி பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.


புதுச்சேரி தவளகுப்பம் அருகே கடல் அலையில் சிக்கி பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் சிறுமலை தாழகடை பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் கபிலன் (18). பிளஸ் 2 தோ்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த அவா், நண்பா்கள் 6 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனா்.
இங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பாா்த்த அவா்கள், வியாழக்கிழமை தவளகுப்பம் அருகே புதுக்குப்பம் கடற்கரைக்கு வந்தனா். கடல் அழகை ரசித்த அவா்கள் பின்னா் கடலில் இறங்கி குளித்தனா். அப்போது, எழுந்த ராட்சத அலையில் கபிலன் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டாா்.
அவரை நண்பா்களால் காப்பாற்ற முடியாததால், கூச்சலிட்டனா். இதைக் கேட்டு அங்கு விரைந்து வந்த மீனவா்கள், கபிலனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
பின்னா், அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கபிலன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தவளகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...