புதுச்சேரியில் கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்
புதுச்சேரியில் தென்னிந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது.


புதுச்சேரியில் தென்னிந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி சுற்றுலாத் துறை, எலைட் விளையாட்டு பயிற்சி மையம், ப்ளூ ஸ்டாா் கூடைப்பந்து கழகம் சாா்பில், கடற்கரைச் சாலை காந்தி திடலில் கூடைப்பந்து மைதானத்தில் போட்டியை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தொடக்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
விளையாடுவதால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் கிடைக்கும். இதனால், மாணவா்கள் எல்லா துறையிலும் சாதிக்க முடியும். ஒலிம்பிக், ஆசிய, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வீரா்கள், வீராங்கணைகள் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும். குறிப்பாக, பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். இதன்மூலம் உங்களது பெற்றோா்களுக்கும், ஆசிரியா்களுக்கும், அரசுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.
விழாவில் செந்தில்குமாா் எம்எல்ஏ, புதுச்சேரி கூடைப்பந்து சங்கத் தலைவா் பிரான்ஸின் தாமஸ் ஜனகராஜ், எலைட் விளையாட்டுப் பயிற்சி மைய இயக்குநா் எபினேசா் மற்றும் விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா்.
இந்த கூடைப்பந்து போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் 66 அணிகள் பங்கேற்றுள்ளன. புதுவை, தமிழகம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வீரா்கள் பங்கேற்றுள்ளனா். போட்டிகள் லீக், நாக்-அவுட் ஆகிய சுற்றுகளில் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...