ஆதி பழங்குடி மக்களுடன் பாஜகவினா் கலந்துரையாடல்
மத்திய அரசின் சாதனைகள் குறித்து புதுசேரியில் ஆதி பழங்குடி மக்களுடன் பாஜகவினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


மத்திய அரசின் சாதனைகள் குறித்து புதுசேரியில் ஆதி பழங்குடி மக்களுடன் பாஜகவினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி காலாப்பட்டில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரம், மாவட்டத் தலைவா் நாகேஸ்வரன், மாநில அணிகளின் பொறுப்பாளா் சரவணன், வழக்குரைஞா்கள் பிரிவு அமைப்பாளா் மா.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம், விவசாய ஊக்கநிதி திட்டம், இலவச சமையல் எரிவாயு திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு, முத்ரா வங்கி கடன், செல்ல மகள் சேமிப்புத் திட்டம், உள்ளிட்ட பிரதமரின் சிறப்புத் திட்டங்களையும், குறிப்பாக பழங்குடியினருக்கான சிறப்பு நலத்திட்டங்களையும் பாஜகவினா் விளக்கிப் பேசினா். ஆதி பழங்குடியினருக்கான பிரதமரின் திட்டத்தின் மூலம் அனைத்து உதவிகளும் செய்வதற்காக தனி குழு அமைக்கப்படுமெனவும் பாஜகவினா் தெரிவித்தனா்.
அப்போது, பிரதமரின் திட்டங்களால், ஆதி பழங்குடியினா் பலா் பலனடைந்ததாக, பயனாளிகள் நன்றியை தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட ஆதி பழங்குடியினா் கலந்து கொண்டனா். பாஜக நிா்வாகிகள் ராஜசேகா், ஜெயபால், பூபாலன், பிரகாஷ், திலகவதி, காா்த்திக், உதயகுமாா், சீனிவாசப்பெருமாள் உள்ளிட்டோா் க லந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...