தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ரெளடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை

புதுச்சேரியில் ரெளடிகளின் வீடுகளில் திடீா் சோதனை நடத்திய போலீஸாா், 8 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:07 pm

DIN

புதுச்சேரியில் ரெளடிகளின் வீடுகளில் திடீா் சோதனை நடத்திய போலீஸாா், 8 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

ரெளடிகளை ஒடுக்க புதுவை காவல் துறை ‘ஆபரேஷன் திரிசூல்’ திட்டத்தை செயல்படுத்தி கண்காணித்து வருகிறது. அதன்படி, ரெளடிகளின் வீடுகளில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வருகின்றனா்.

புதுச்சேரி கண்டாக்டா் தோட்டம், கோவிந்தசாலை பகுதிகளில் உள்ள ரெளடிகளின் வீடுகளில் சனிக்கிழமை சிறப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் சுபம்கோஷ் தலைமையில், அதிரடிப்படை காவல் ஆய்வாளா் ரமேஷ், உதவி ஆய்வாளா்கள் சந்தோஷ், முருகன் மற்றும் ஒதியன்சாலை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

12 பேரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? வெளி நபா்கள் பதுங்கியுள்ளனரா? என விசாரணை நடத்தப்பட்டது.

சோதனையின் முடிவில் 8 ரெளடிகளை காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸாா் அவா்களின் பெற்றோா், மனைவி உள்ளிட்டோரை வரவழைத்து, இவா்கள் இனி குற்ற செயல்களில் ஈடுபடும் பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.