கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மாணவா்கள் உண்ணாவிரதம்
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனா்.


புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனா்.
இந்தக் கல்லூரிக்கு நிகழாண்டுக்கான அங்கீகாரம், அடிப்படை வசதிகள், புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கு கல்வி பயிலும் 100-க்கும் மேற்பட்டோா் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் கடந்த 7- ஆம் தேதி முதல் வகுப்புகளைப் புறக்கணித்தனா்.
இந்த நிலையில், இவா்கள் வியாழக்கிழமை அண்ணா சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்து மாணவா் கூட்டமைப்பு நிறுவனா் சுவாமிநாதன், சுயேச்சை எம்எல்ஏ நேரு உள்ளிட்டோா் பங்கேற்று, ஆதரவு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...