ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோவை: சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு!

கோவை அருகே சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

News image

சிறுமிக்குப் பாராட்டு - DPS

Updated On :25 மார்ச் 2026, 12:09 pm IST

கோவையில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் மணீஷ் (45). இவரது மகள் ஜான்வி (9). புலியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மதியம் மணீஷ் தனது மகள் ஜான்வியுடன் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர்கள் தேர் வீதி அருகே சென்ற போது, சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது.

இதனைக் கண்டெடுத்த ஜான்வி அதனை திறந்து பார்த்தபோது, உள்ளே 9,500 ரூபாய், ஏ.டி.எம் கார்டு, ஆதார் கார்டு, லைசென்ஸ் ஆகியவை இருந்தன. உடனே ஜான்வி தனது தந்தையுடன் கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று கீழே கண்டெடுத்த பணத்தை இன்ஸ்பெக்டர் சங்கரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் போலீசார், மணி பர்சில் இருந்த ஆதார் அட்டையில் உள்ள முகவரியை வைத்து மணிபர்சை தவற விட்ட நபரை கண்டறிந்தனர். அவர் பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த ஐ.டி ஊழியர் ஹரீஸ் (33) என்பது தெரியவந்தது. போலீசார் நேற்று அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

அங்கு மாணவி ஜான்வி, மணிபர்சை அவரிடம் ஒப்படைத்தார். மாணவியின் இந்த செயலைப் பாராட்டி ஜான்விக்கு பொன்னாடை போர்த்தி இன்ஸ்பெக்டர் சங்கர் வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.