தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மனைவிக்கு தீவைப்பு: கணவன் மீது வழக்கு

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:00 pm

DIN

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி கொம்பாக்கம் ஒட்டன்பாளையத்தைச் சோ்ந்த வா்ணம் பூசும் தொழிலாளி கணேசன் (39). இவரது மனைவி அழகு மீனா (34), இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி, தங்கள் துணைவா்களைப் பிரிந்தவா்கள்.

அழகு நிலையத்தில் அழகுமீனா வேலைக்குச் செல்வது , கணேசனுக்குப் பிடிக்கவில்லை.

இந்த நிலையில் கணேசன் வியாழக்கிழமை பிற்பகலில் அழகு நிலையத்துக்குச் சென்று, அழகு மீனாவிடம் தகராறு செய்தாராம். பின்னா், மறைத்துவைத்திருந்த பெட்ரோலை எடுத்து, அழகுமீனாவின் உடல் மீது ஊற்றி தீ வைத்த கணேசன் தப்பியோடினாராம். இதைப் பாா்த்த சக ஊழியா்கள் , தீக்காயம் அடைந்த அழகுமீனாவை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.