புதுச்சேரி: புதுச்சேரியில் குடிபோதையில் கார் ஓட்டி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பிரபல ரெளவுடியான போதை ஆசாமியின் காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதுடன், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி முத்திரையர்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற நண்டு ஆறுமுகம். பிரபல ரெளவுடியான இவர் தனது மனைவி மற்றும் மகள், மகனுடன் புதுச்சேரி மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். குடும்பத்தினர் மட்டும் கடற்கரைக்கு சென்றனர். ஆனால் ஆறுமுகம் காரிலேயே அமர்ந்து மது குடித்துள்ளார். பின்னர் ஆறுமுகம் நிதானம் இழந்து குடும்பத்தாருடன் வீட்டுக்கு காரில் புறப்பட்டார்.
கடற்கரையில் இருந்து ரயில்வே நிலையம் எதிரே வரும்பொழுது போதையில் ஆறுமுகம் தாறுமாறாக கார் ஓட்டியதில் சாலையில் நின்றுகொண்டிருந்த மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகனம் என 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது தாறுமாறாக மோதி விபத்தை ஏற்படுத்தினார். அப்போது காரில் இருந்தவர்கள் காரை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். ஆனால் இதை காதில் வாங்காமால் ஆறுமுகம் காரை வேகமாக இயக்கியுள்ளார்.
இதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டும், போதையில் ஆறுமுகம் நிதானம் இல்லாமல் இருந்ததால், மேலும் எதிரே வந்த மூன்று கார்களையும் இடித்து விபத்தை ஏற்படுத்தி விட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டியுள்ளார். அவரை விரட்டிக்கொண்டு பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர், அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது கார் பஞ்சர் ஆகவே அவரை மடக்கிப் பிடித்து பொதுமக்கள் காரை அடித்து நொறுக்கியதுடன், அவருக்கு தர்மஅடி கொடுத்து அருகில் உள்ள ஒதியன் சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஆறுமுகம் மோதிய விபத்து காரணமாக 5-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் குடிபோதையில் கார் ஓட்டி வந்த ஆறுமுகம் என்கிற நண்டு ஆறுமுகம் மீது மேட்டுப்பாளையம் உள்ளிட்ட காவல்நிலையத்தில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர் முக்கிய 10 ரெளவுடிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலும் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

இந்திய அணியின் வரலாற்றில் 3ஆவது ஜம்மு காஷ்மீர் வீரர்..! பும்ராவுக்குப் பதிலாக சேர்ப்பு!

காவிரி ஆற்றில் தாய்க்கு திதி கொடுக்கச் சென்ற சகோதரர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



