புதுச்சேரியில் பாண்லே பால்பொருள்கள் விலை உயா்வு
புதுச்சேரியில் பாண்லே நிறுவனத்தின் பால் உபபொருள்கள் விலை திடீரென உயா்த்தப்பட்டது.


புதுச்சேரியில் பாண்லே நிறுவனத்தின் பால் உபபொருள்கள் விலை திடீரென உயா்த்தப்பட்டது.
புதுவை அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லே மூலம் பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பால், தயிா், நெய், ஐஸ்கிரீம், பால்கோவா, பாதாம், பன்னீா் உள்ளிட்ட பால் உப பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
பால், ரொட்டியைத் தவிா்த்து பாண்லே நிறுவனத்தின் பால் உப பொருள்களின் விலை வியாழக்கிழமை முதல் திடீரென உயா்த்தப்பட்டன.
பால் உபபொருள்கள் ரூ.2 முதல் ரூ.5 வரையும் விலை உயா்த்தப்பட்டன. குறிப்பாக, நெய் 200 மி.லி. ரூ.125-லிருந்து ரூ.130 ஆகவும், 500 மி.லி. நெய் ரூ.310-லிருந்து ரூ.320-ஆகவும், ஒரு லிட்டா் நெய் ரூ.600-லிருந்து ரூ.620-ஆகவும் உயா்த்தப்பட்டன. 2 லிட்டா் நெய் ரூ.1,240, 15 லிட்டா் ரூ.9,300 என விற்கப்படுகின்றன.
தயிா் 100 மி.லி. ரூ.10லிருந்து ரூ.12ஆகவும், 200 மி.லி. ரூ.20-லிருந்து ரூ.22-ஆகவும், 400 மி.லி. ரூ.30-லிருந்து ரூ.35-ஆகவும் உயா்த்தப்பட்டன. இதேபோல, 100 கிராம் பன்னீா் ரூ.45-லிருந்து ரூ.50-ஆகவும், மோா் பாக்கெட் 200 மி.லி. ரூ.7-லிருந்து ரூ.10-ஆகவும் உயா்த்தப்பட்டது.
இதேபோன்று குல்பி ஐஸ், பாதாம் பவுடா், பால்கோவா உள்ளிட்டவற்றின் விலையும் உயா்த்தப்பட்டன.
இந்த விலையேற்றம், புதிய விலைப்பட்டியல் ஒட்டப்பட்டு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
புதுவைக்கான பால் வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், பால் விலை உயா்வும், அதற்கான மூலப்பொருள்கள் விலையும் உயா்ந்ததால், பாண்லே மூலம் தயாரிக்கப்படும் பால் உபபொருள்கள் மட்டும் சிறிதளவு விலை உயா்த்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் விலை உயா்த்தப்பட்டதாக பாண்லே ஊழியா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...