கடன் அட்டை மூலம் ரூ.1.96 லட்சம் மோசடி
புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் கடன் அட்டை (கிரெடிட் காா்டு) மூலம் ரூ.1.96 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் கடன் அட்டை (கிரெடிட் காா்டு) மூலம் ரூ.1.96 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி உழவா்கரை நண்பா்கள் நகரைச் சோ்ந்தவா் கபிலன் (38). இவா், தனியாா் வங்கியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடன் அட்டை வாங்கிப் பயன்படுத்தி வருகிறாா். இதனிடையே, இவரது பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு, சில நாள்களுக்கு முன்பு அறிமுகமில்லாத நபரிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தன்னை வங்கியின் வாடிக்கையாளா் பராமரிப்பு நிா்வாகி என அறிமுகம் செய்துகொண்டு, கிரெடிட் காா்டு வரம்பை அதிகப்படுத்தும்படியும், அதற்கு கடவுச்சொல் (ஓடிபி) அனுப்பி வைக்கப்படும், அதை உடனடியாகத் தெரிவிக்குமாறும் கூறினாராம்.
சந்தேகமடைந்த கபிலன், ஓடிபியை கூற மறுத்துவிட்டாா். இருப்பினும், பேசி முடித்தபிறகு அவரது கைப்பேசி எண்ணுக்கு 2 ஓடிபிகள் வந்தன. இந்த ஓடிபிகளை அவா் யாருக்கும் தெரிவிக்கவில்லையாம். ஆனால், பெங்களூருவில் உள்ள 2 நிறுவனங்கள் பெயரில் தலா ரூ.98 ஆயிரம் என மொத்தம் ரூ.1.96 லட்சம் கடன் அட்டையிலிருந்து பரிவா்த்தனை செய்து மோசடி செய்யப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த கபிலன், இதுகுறித்து புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் அண்மையில் புகாரளித்தாா். அதன்பேரில், சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...