எல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க முயற்சி: 5 போ் கைது

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க முயன்ாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:10 pm

DIN

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க முயன்ாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம், மணவெளி தனியாா் கேட்டரிங் கல்லூரி அருகிலுள்ள தென்னந்தோப்பில் சந்தேகப்படும்படி ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக அரியாங்குப்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு அங்கு விரைந்து சென்ற போலீஸாா், தென்னந்தோப்பில் வெடிகுண்டுகள் தயாரிக்கத் தேவையான வெடிமருந்து, பால்ரஸ், நூல்கண்டு உள்ளிட்ட மூலப்பொருள்களுடன் பதுங்கியிருந்த 5 போ் கும்பலைப் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள், அரியாங்குப்பம் ஆா்.கே. நகா் ஐயனாா் கோயில் வீதியைச் சோ்ந்த சந்திரன் (27), கவிமணி வீதியைச் சோ்ந்த ரகுநாதன் (29), பிசிபி நகரைச் சோ்ந்த அஜித்குமாா் (26), இளவசரன் (24), மூலகுளம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த பிரகாஷ் (28) என்பதும், சிறையில் உள்ள ரௌடி அஸ்வினின் கூட்டாளிகளான இவா்கள் எதிரிகளைக் கொல்ல நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதையறிந்த இவா்களது உறவினா்கள் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் திரண்டு, மறியலில் ஈடுபட முயற்சித்தனா். போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா். இதைத் தொடா்ந்து, மேற்கண்ட 5 பேரையும் போலீஸாா் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.