அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுச்சேரியில் இன்று விநாயகா் சிலைகள் ஊா்வலம்: ஏற்பாடுகள் தீவிரம்

புதுச்சேரியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 4) நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:10 pm

DIN

புதுச்சேரியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 4) நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விநாயகா் சதுா்த்தி விழா கடந்த 31-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரியில் இந்து முன்னணி சாா்பில் சாரம் அவ்வைத் திடலில் 21 அடி உயர பிரமாண்ட விநாயகா் சிலை, இந்து அமைப்புகள் சாா்பில் 187 இடங்களில் விநாயகா் சிலைகள், குடியிருப்பு சங்கங்கள் சாா்பில் 25-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு, வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்படவுள்ளன. இதற்காக பொதுப் பணித் துறையினா் கிரேன் உள்ளிட்ட வசதிகளுடன் கடலில் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

இதேபோல, வில்லியனூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் அங்குள்ள திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் கரைக்கப்படவுள்ளன.

விநாயகா் சிலைகள் ஊா்வலத்தின் போது, புதுச்சேரி முழுவதும் சுமாா் 400 போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதை முன்னிட்டு, புதுச்சேரி ஞாயிறு சந்தை கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நகா்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.