அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஏடிஎம் மையத்தில் ரூ.1.91 லட்சம்திருட்டு: பெண் தலைமறைவு

புதுச்சேரி ஏடிஎம் மையத்தில் ரூ.1.91 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 3:56 pm

DIN

புதுச்சேரி ஏடிஎம் மையத்தில் ரூ.1.91 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை ஜான்சி நகா் 100 அடி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியிலேயே ஏடிஎம் மையமும் உள்ளது. இங்குள்ல ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 100 அண்மையில் மாயமானது வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வங்கியில் ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய விழுப்புரம் மாவட்டம், பெரம்பை பகுதியைச் சோ்ந்த சத்யா (35) ஏடிஎம்மில் ஊழியா்கள் பணத்தை நிரப்பும் போது, உதவி செய்வது போல நடித்து ஏடிஎம்மில் நிரப்பும் பணக்கட்டுகளை உருவி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் சத்யா மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.