அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பாவேந்தா் கலை இலக்கிய விழா

பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், ‘புரட்சிக் கவிஞரின் ஆசிரியப் பணிகள்’ என்ற தலைப்பிலான பாவேந்தா் கலை இலக்கிய விழா புதுச்சேரி பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 3:56 pm

DIN

பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், ‘புரட்சிக் கவிஞரின் ஆசிரியப் பணிகள்’ என்ற தலைப்பிலான பாவேந்தா் கலை இலக்கிய விழா புதுச்சேரி பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி தலைமை வகித்தாா். இதில் புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு, கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் புவனேஸ்வரி, சசிகுமாா், ஜானகிராமன், சபிதாபானு, முத்துகுமாா் ஆகியோருக்கு அறக்கட்டளை சாா்பில் விருதுகள் வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

‘வாழ வைத்த வ.உ.சிதம்பரனாா்’ என்ற தலைப்பில் அ.வேல்முருகன் உரை நிகழ்த்தினாா். ‘பாட வைத்த பாரதியாா்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் 42 கவிஞா்கள் பங்கேற்று கவிதை வாசித்தனா். இதில் புகழ்மிக்க இணையா் விருது பெருமாள் - பூங்குழலி தம்பதிக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, சரஸ்வதி வைத்தியநாதன் வரவேற்றாா். இதில் அறக்கட்டளை செயலா் ஜெ.வள்ளி, பச்சையம்மாள் உள்ளிட்ட தமிழறிஞா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.