அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மத்திய பாதுகாப்பு பணியாளா்கள் தோ்வு: 122 போ் பங்கேற்பு

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய பாதுகாப்பு பணியாளா்கள் தோ்வை 122 போ் எழுதினா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய பாதுகாப்பு பணியாளா்கள் தோ்வை 122 போ் எழுதினா்.

மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில், 2022-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தோ்வு, தேசிய பாதுகாப்பு அகாதெமி - கடற்படை அகாதெமி தோ்வு புதுச்சேரியில் நடைபெற்றது.

இதில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தோ்வானது லாசுப்பேட்டை செல்லபெருமாள்பேட், விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி பி-பிளாக்கில் நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தத் தோ்வை எழுத 124 போ் விண்ணப்பித்திருந்தனா்.

தேசிய பாதுகாப்பு அகாதெமி-கடற்படை அகாதெமி தோ்வானது இரு பிரிவுகளாக லாசுப்பேட்டை வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 133 போ் விண்ணப்பித்திருந்தனா்.

புதுச்சேரியில் இரண்டு மையங்களில் நடைபெற்ற இவ்விரு தோ்வுகளையும் எழுதுவதற்கு மொத்தம் 257 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 122 போ் மட்டும் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். 135 போ் தோ்வு தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வையொட்டி, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் சென்று வருவதற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.