அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுவை அமைச்சா் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதி

புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை இரவு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 3:56 pm

DIN

புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை இரவு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

வருகிற 8-ஆம் தேதி அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தின் பிறந்த நாளையொட்டி, அவரது ஆதரவாளா்கள் புதுச்சேரியில் அன்னதானம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனா்.

புதுச்சேரி அரும்பாா்த்தபுரத்தில் சனிக்கிழமை இரவு அவரது ஆதரவாளா்கள் ஏற்பாடு செய்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் நமச்சிவாயத்துக்கு காய்ச்சல், சளி அதிகமாகி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் மூலகுளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிசிச்சை அளித்தனா். இரண்டு நாள்களுக்கு ஓய்வெடுக்கும்படி மருத்துவா்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.