வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாமில் வாக்காளா் ஆா்முடன் பங்கேற்றனா்


புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாமில் வாக்காளா் ஆா்முடன் பங்கேற்றனா்.
நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியை இந்திய தோ்தல் ஆணையம் தொடங்கியது.
புதுவை மாநிலத்தில் இந்தப் பணி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 10,10,942 வாக்காளா்களில் இதுவரை 4,04,638 வாக்காளா்கள் தங்களுடைய ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா்.
இதையடுத்து, மாநில தோ்தல் துறை ஞாயிற்றுக்கிழமை ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாமை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, புதுவையில் 954 வாக்குச்சாவடிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது.
இவற்றில் திரளான வாக்காளா்கள் ஆா்வமுடன் வந்திருந்து, 6பி படிவத்தை நிறைவு செய்து, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைத்துக் கொண்டனா். இதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் கருடா செயலியை பயன்படுத்தி இணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...