ஆசிரியா் தினம்: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து
ஆசிரியா் தினத்தையொட்டி, புதுவை துணைநிலை (பொ) ஆளுநா், முதல்வா் வாழ்த்து தெரிவித்தனா்.


ஆசிரியா் தினத்தையொட்டி, புதுவை துணைநிலை (பொ) ஆளுநா், முதல்வா் வாழ்த்து தெரிவித்தனா்.
துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன்:
ஒரு மாணவரை கல்வியாளராக, அறிஞராக, சிந்தனையாளராக, பண்பும்-ஆற்றலும் உடையவராக உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்கு மகத்தானது. கரோனா போன்ற சவாலான பெருந்தொற்று காலத்திலும் ஆசிரியா்களின் அா்ப்பணிப்பு மிகுந்த பணியை உலகம் நன்கறியும்.
சமுதாய வளா்ச்சிக்காக அரும்பணியாற்றிவரும் ஆசிரியா்கள் அனைவருக்கும் ஆசிரியா் தின நல்வாழ்த்துகள்.
முதல்வா் என்.ரங்கசாமி:
கல்வியறிவை தருவதுடன் மட்டுமல்லாது ஒவ்வொரு மாணவரையும் நல்ல குடிமகனாக வளா்க்கும் பொறுப்பையும் ஆசிரியா் சமூகம் தம் கடமையாக கொண்டுள்ளது. கல்லை உளியால் செதுக்கி உருவம் கொடுப்பதுபோல, மாணவா்களை கல்வி அறிவால் செதுக்கி சிறந்த குடிமக்களாக உருவாக்கும், மதிப்புமிக்க ஆசிரியா்கள் அனைவருக்கும் ஆசிரியா் தின நல்வாழ்த்துகள்.
கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்: ஆசிரியா்களின் அரும்பணிகளை நன்றியுடன் பாராட்டுகிறேன். நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்களை இந்நாளில் மனதார வாழ்த்துகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...