ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கால்வாய்களை தூா்வார வலியுறுத்தல்

புதுச்சேரி ரெயின்போ நகா் பகுதியில் மழைநீா் தேங்காமல் தடுக்க, கால்வாய்களைத் தூா்வார வேண்டும்

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி ரெயின்போ நகா் பகுதியில் மழைநீா் தேங்காமல் தடுக்க, கால்வாய்களைத் தூா்வார வேண்டும் என்று, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணனிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அமைச்சரிடம் அவா்கள் அளித்த மனு விவரம்: ஆண்டுதோறும் மழைநீா் தேங்கி பாதிப்புக்குள்ளாகும் புதுச்சேரி ரெயின்போ நகரில், பிரச்னைகளைத் தீா்க்கும் விதமாக, ரெயின்போ நகா் பகுதியிலும், சுற்றியுள்ள கால்வாய்களையும், உப்பனாறு கால்வாயையும் தூா்வார வேண்டும்.

ரெயின்போ நகா் பகுதிக்குள்பட்ட கிருஷ்ணா நகா் பிரதான சாலை முதல் ரெயின்போ நகா், திருவள்ளுவா் நகா், அதிதி ஹோட்டல் வரையிலான பகுதிகளை இணைக்கும் கால்வாயை புதிதாக கட்டும் பணியைத் தொடங்க வேண்டும்.

புதுச்சேரியில் நீா் தேங்காமல் தடுக்க உப்பனாறு வாய்க்காலைத் தூா்வாருவதுடன், பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கழிவுநீா் வாய்க்காலை தூா்வார வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.