புதுச்சேரியில் காலாவதியான நூடுல்ஸ் விற்றதாக புகார்: சமூக வலைதளங்களில் வைரல்!
By DIN | Published On : 13th December 2022 11:21 AM | Last Updated : 13th December 2022 11:21 AM | அ+அ அ- |

புதுச்சேரி முதலியார்பேட்டை அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் கேப்ரியல். இவர் உப்பளம் சாலையில் உள்ள சிவா என்கிற மளிகைக் கடையில் மிகப் பிரபலமான நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கி சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்று அதனுடைய காலாவதி தேதியை பார்த்தபோது AUG 2022 என்று இருந்ததை பார்த்த அவர், தான் வாங்கிய கடைக்கு வந்து ஏன் நான்கு மாதம் காலாவதியாகி உள்ள நூடுல்ஸ் பாக்கெட்டை கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆனால் கடைக்காரர்கள் இது நிறுவனத்திடம் இருந்து நேற்று தான் வாங்கினேன் என்றும், நீங்கள் பில் பெற்றுக் கொண்டு சென்று நிறுவனத்திடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து கடையின் முன்பு நின்று காப்ரியல், இதுபோன்று விற்பனை செய்யும் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியோ பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த விடியோவானது அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
இதையும் படிக்க: 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை: தமிழக அரசு
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, புகார் பெற்றுக்கொண்டு இது குறித்து விசாரணை செய்யப்படும் என தெரிவித்தனர்.