புதுச்சேரி பேரவை முன்பு ஏனாம் எம்எல்ஏ உண்ணாவிரதம்
By DIN | Published On : 07th November 2022 11:12 AM | Last Updated : 07th November 2022 11:12 AM | அ+அ அ- |

உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏ அசோக்.
புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு ஏனாம் எம்எல்ஏ அசோக் திடீரென உண்ணாவிரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏனாம் தொகுதியில் மேம்பாட்டு பணிகள் நடக்கவில்லை. சூதாட்டம் நடப்பதை காவல்துறை தடுக்கவில்லை எனக்கூறி ஏனாம் எம்எல்ஏ அசோக் புதுச்சேரி சட்டப்பேரவை வாசல் முன்பு அமர்ந்து திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிக்க- 2024 டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து
இதனால் பேரவை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. உண்ணாவிரத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அசோக் பாஜக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.