

புதுச்சேரியில் ஆட்டோ - பேருந்து மோதிய விபத்தில் 8 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
புதுச்சேரி மூலக்குளம், அருள் பார்த்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் புஷி வீதி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை ஆட்டோவில் புறப்பட்டனர்.
அவர்களது ஆட்டோ புஷி வீதியில் வந்த போது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த 8 பள்ளி குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.
காயமாடைந்த குழந்தைகள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் இரண்டு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் ஆட்டோ டிரைவர் விக்னேஷும் காயமடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என் ரங்கசாமி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளை பார்வையிட்டு நலம் விசாரித்தனர். குழந்தைகளின் பெற்றோர்களிடமும் ஆறுதல் கூறினர்.
குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார். தொடர்ந்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.