புதுச்சேரி: சென்டாக் மூலம் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு செண்டாக் மூலம் இன்றுமுதல்(மே 17) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: சென்டாக் மூலம் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் மூலம் இன்றுமுதல்(மே 17) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல், நர்சிங், கலை அறிவியல், டிப்ளமோ படிப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், நர்சிங் பாடப்பிரிவுகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளதாக புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தொழில் படிப்புக்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 1000 ரூபாயும், கலை, அறிவியல், வணிக படிப்புக்கு 300 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில் படிப்புக்கு 500 ரூபாயும், கலை, அறிவியல் படிப்புக்கு 150 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

மேலும், விவரங்கள் சென்டாக் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com