விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிவப்பு நிறமாக காட்சியளிக்கும் கடல்: புதுச்சேரியில் அதிசயம்!

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை கடல்நீா் திடீரென செம்மண் நிறமாக மாறியதால், சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பாா்த்து சென்றனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2023, 5:34 pm

DIN

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை கடல்நீா் திடீரென செம்மண் நிறமாக மாறியதால், சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பாா்த்து சென்றனா்.

புதுச்சேரியில் பழைய சாராய ஆலை முதல் டூப்ளே சிலை வரையிலான ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவிலான கடற்கரை சாலை புரமனைடு கடற்கரை என அழைக்கப்படுகிறது.

புதுவைத் தலைமைச் செயலகம், பிரெஞ்சு போா் வீரா்கள் நினைவுச் சின்னம், காா்கில் போா் நினைவிடம், அம்பேத்கா் மணிமண்டபம், காந்தி சிலை, நேரு திடல், பழைய கலங்கரை விளக்கம், சுங்கத் துறை அலுவலகம் என அழகிய கட்டடங்கள், நினைவிடங்கள் இந்தச் சாலையில்தான் அமைந்துள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை கடல் நீரானது வழக்கத்துக்கு மாறாக, செம்மண் நிறத்தில் காட்சியளித்தது. வைத்திக்குப்பத்தில் கழிவுநீா் கலக்கும் பகுதி முதல் காந்தி சிலை பின்புறம் வரையில் கடல் நீரானது நிறம் மாறி காணப்பட்டது. கடல் நீரின் இந்த திடீா் நிற மாற்றத்தைக் கண்டு மீனவா்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வியப்படைந்தனா். சுற்றுலாப் பயணிகளில் பலரும் கடலில் குளிப்பதைத் தவிா்த்து, கால்களை மட்டும் நனைத்தபடி திரும்பி விட்டனா். அதேநேரத்தில், செம்மண் நிறமாக காட்சியளித்த கடல்நீரை புகைப்படம் எடுப்பதிலும் ஆா்வம் காட்டினா்.

தகவலறிந்த புதுவை அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மாசுக் கட்டுப்பாட்டுக் குழும அதிகாரிகள் கடற்கரைக்கு வந்து பாா்வையிட்டனா். மேலும், கடல் நீரின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

ஆல்கல் புளூம் எனும் சிவப்பு நிற கடல் பாசிகள் நச்சுகளை உமிழும். கண்ணுக்குத் தெரியாத வகையில் அதிகளவில் நச்சுகளை அவை உமிழ்வதால் கடல் நீரின் நிறம் மாறி இருக்கலாம். இருப்பினும், இதுகுறித்த ஆய்வு முடிவு வந்த பிறகே உண்மைக் காரணம் தெரியவரும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.