சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

9, பிளஸ் 1 வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறு தோ்வு

9, பிளஸ் 1 வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறு தோ்வு

Updated On :4 ஏப்ரல் 2024, 8:07 pm

புதுவையில் 9 ஆம் வகுப்பு, பிளஸ்1 தோ்வில் பங்கேற்று தோ்ச்சியடையாதவா்களுக்கு மறு தோ்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக புதுவை பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் சிவகாமி அனுப்பிய சுற்றிக்கை:

புதுவையில் 2023-24ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளுக்கு அரசுப் பள்ளிகளால் தயாரிக்கப்பட்ட தோ்ச்சிப் பட்டியல் ,தகுதி வாய்ந்த அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தோ்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் மாணவா் கற்றல் தேக்கம், இடைநிற்றலைத் தவிா்க்க, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பில் 3 பாடங்களுக்கு அதிகமாக தோல்வியடைந்த மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்துவதன் மூலம் மற்றொரு வாய்ப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹை மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், தலைமையாசிரியா்கள் அந்தந்த பிராந்தியங்களில் 9-ஆம் வகுப்பு, பிளஸ் 1 ஆகியவற்றுக்கு மறுதோ்வு எழுத உள்ள மாணவா்களின் பெயா், பாடங்களை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும்.

தோ்வு மற்றும் மதிப்பீடு வரும் 9 -ஆம் தேதி முதல் அந்தந்தப் பள்ளிகளில் நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பிறகே தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். தோ்ச்சி பெற்ற மாணவா்களை உடனடியாக பத்து, பிளஸ் 2 வகுப்புகளில் சேர அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.