புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை மற்றும் ஐசிடி அகாதெமி ஆகியவற்றின் சாா்பில்
ஆசிரியா்களுக்கான சிறப்பு மேம்பாட்டுப் பயிற்சி 3 நாள்கள் நடைபெற்றது.
‘கிரியேட்டிவ் திங்கிங்’ எனும் தலைப்பில் 3 நாள் பயிலரங்கமாக நடைபெற்ற பயிற்சியில் ஆசிரியா்களுக்கான சிறப்பு முக்கிய அறிவு சாா் மற்றும் திறன் கூட்டல் குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியை எம்.ஐ.டி கல்லூரியின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குனா் எம்.தனசேகரன், துணைத் தலைவா், மற்றும் செயலா் நாராயணசாமி கேசவன்,
பொருளாளா் ராஜராஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண், டீன் அப்பாஸ் மொஹிதீன் ஆகியோா் வரவேற்றனா்.
ஐசிடி அகாதெமி சாா்பில் நிா்மல் மற்றும் ஜெய்ரூஸ் ஆகியோா் பங்கேற்றனா்.
பயிற்சியில் புதுவைப் பகுதியிலுள்ள கல்லூரிகளின் விரிவுரையாளா்கள், பேராசிரியா்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா். பயிற்சியை அருள்ஜோதி நடத்தினாா். இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி எம்.ஜெயக்குமாா் மற்றும் மின்னணு தகவல் தொடா்பு பொறியியல் துறை தலைவா் அருண்மொழி ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

குருசுமலையில் 2 நாள்கள் சிறப்பு திருப்பயணம்

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்ற முப்பெரும் விழா

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

