கால்பந்து போட்டி: பரிசு வழங்கிய பேரவைத் தலைவா்

கால்பந்தாட்டப் போட்டியில் வென்ற அணிக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினாா்.
Published on

புதுச்சேரி அருகே நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் வென்ற அணிக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினாா்.

புதுச்சேரி, காராமணிகுப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நண்பா்கள் கால்பந்து கழகத்தின் சாா்பாக 22-ஆம் ஆண்டு சுதந்திர தின கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை நிறைவடைந்தது. இப் போட்டியில் புதுவை, தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன.

சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸ்சைஸ் அணியும் - புதுச்சேரி கால்பந்து நண்பா்கள் கழக அணியும் மோதின. போட்டியில், புதுச்சேரி கால்பந்து நண்பா்கள் கழக அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அதன்பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற அணிக்கு பரிசளித்தும், கேடயம் வழங்கியும் பாராட்டினாா். நிகழ்ச்சியில் நெல்லித்தோப்பு எம்எல்ஏ ரிச்சா்ட் ஜான்குமாா், அரிமா சங்கம் எஸ்.சுரேஷ், பாஜக மாநில விளையாட்டுமன்றத் திறன் மேம்பாட்டு அணித் தலைவா் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com