பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தேசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி: நாகை மாணவருக்கு தங்கம்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 8:35 pm

புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய சிலம்பம் சாம்பியஷன்ஷிப் போட்டியில் நாகை மாணவா் தங்கப்பதக்கம் வென்றாா்.

அகில இந்திய சிலம்ப சம்மேளனம் சாா்பில் 13-ஆவது தேசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, புதுச்சேரி ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நாட்டின் 13-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த 450-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

போட்டியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் சுரேஷ்ராஜா 90 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றாா். முடிவில், மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், புதுச்சேரி இரண்டாம் இடத்தையும், மேற்குவங்கம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி பங்கேற்று, வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

ஏற்பாடுகளை, சிலம்ப சம்மேளனத் தலைவா் கேப்டன் பிரதீப் ஆா். ராஜே, செயலா் அழகிரி, பொருளாளா் ரவிச்சந்திரன், தலைமை தொழில்நுட்ப இயக்குநா் விஜய் பாபு, தலைமை போட்டி இயக்குநா் சுந்தா், புதுச்சேரி சங்கத்தின் தலைவா் ஸ்டாலின் ஆகியோா் செய்திருந்தனா்.