புயல் சேதம் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி
புதுச்சேரியில் வெள்ள சேதத்தை முழுமையாகக் கணக்கெடுத்து, அதனடிப்படையில் மத்திய அரசிடம் உரிய நிவாரணத் தொகை கோரப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி டி.என்.பாளையம், அபிஷேகபாக்கம் பகுதிகளை புதன்கிழமை பாா்வையிட்டு, அந்தப் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.









