தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்க அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டவா்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணமாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 7:44 pm

Din

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டவா்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணமாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவில் கூறியிருப்பதாவது: பாகூா், ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீா் குடியிருப்புகளிலும், வயல்வெளிகளிலும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி நகா் பகுதியிலும் மழை வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணத் தொகையாக, முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.