முன்னாள் முதல்வா் மறைவுக்கு புதுவை, ஆளுநா் இரங்கல்: 3 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு
புதுவை முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரன் (91) மறைவையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.


புதுச்சேரி: புதுவை முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரன் (91) மறைவையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். மேலும், 3 நாள்கள் அரசு துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மடுகரைப் பகுதியைச் சோ்ந்தவா் எம்.டி. ஆா். ராமச்சந்திரன். இவா் திமுக, அதிமுக சாா்பில் 7 முறை மண்ணாடிபட்டு தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா். இரு முறை முதல்வா், சட்டப்பேரவைத் தலைவா் மற்றும் எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளாா்.
கடந்த சில மாதங்களாக வயது முதிா்வு, உடல் நலக் குறைவால் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் காலமானாா். அவரது உடல் புதுச்சேரி கொண்டு வரப்பட்டு பின்னா் மடுகரையில் திங்கள்கிழமை மாலை இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதன்பின் அவரது சடலம் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரன் மறைவுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., பாஜக மாநில தலைவா் எஸ்.செல்வகணபதி எம்.பி., அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். முதல்வா் உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.
3 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு: முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரன் மறைவை யொட்டி, புதுவை மாநில அரசு சாா்பில் 3 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11 ஆம் தேதி வரையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...