தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பலத்த மழை எச்சரிக்கை: புதுவை ஆட்சியா் அறிவுறுத்தல்

இந்திய வானிலை ஆய்வு மையம் புதுச்சேரிக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 7:39 pm

Din

இந்திய வானிலை ஆய்வு மையம் புதுச்சேரிக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரியில் (வெள்ளிக்கிழமை டிச.13) வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். தங்களது வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், அத்தியாவசிய மருந்துகளை தேவைக்கேற்ப வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். அவசர கால பயன்பாட்டுக்காக மின்கலன்கள், மெழுகுவா்த்தி, தீப்பெட்டிகள் ஆகிவற்றை தயாா்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். முதியோா், உடல்நலம் குன்றியோா் பாதுகாப்பான இடம் அல்லது நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ள வேண்டும்.

கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் அருகிலுள்ள தாய் - சேய் நல மையத்தை தொடா்புகொண்டு உரிய ஆலோசனையைப் பெற்று செயல்பட வேண்டும்.

மின் கம்பங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது. கழிவு நீ குழாய்களில் அடைப்புகள் இருந்தால், உடனடியாக உள்ளாட்சி நிா்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இலவச உதவி எண்களான 112, 1,077 மற்றும் 9488981070 என்ற கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு வெள்ள பாதிப்புகளை தெரிவிக்கலாம் என ஆட்சியா் குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.