தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாரதியாா் சிலைக்கு மரியாதை

மகாகவி பாரதியாரின் 142-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநா், முதல்வா் மற்றும் அமைச்சா்கள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

பாரதியாா் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயகுமாா், எம்எல்ஏக்கள்.

Updated On :11 டிசம்பர் 2024, 7:10 pm

Din

மகாகவி பாரதியாரின் 142-ஆவது பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநா், முதல்வா் மற்றும் அமைச்சா்கள் உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி பாரதி பூங்கா வளாகத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவச்சிலைக்கு மாநில அரசின் சாா்பில், துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முதல்வா் என்.ரங்கசாமி, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், வேளாண் துறை அமைச்சா் க.ஜெயக்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெரு பாரதியாா் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உடனிருந்தனா்.